பெட்ரோல், டீசல் விலையை அமெரிக்கா தான் முடிவு செய்கிறது: ஒன்றிய அமைச்சர் சர்ச்சை

அவுரங்காபாத்: பெட்ரொல், டீசல் விலையை அமெரிக்கா தான் முடிவு செய்கிறது. எனவே ஒன்றிய அரசை குறை சொல்லக்கூடாது என்று ஒன்றிய அமைச்சர் ராவ்சாகேப் தன்வே கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மூத்த பாஜ தலைவரான ஒன்றிய ரயில் மற்றும் சுரங்கத்துறை இணையமைச்சர் ராவ்சாகேப் தன்வே அவுரங்காபாத்தில் கட்சி புதிய அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற போது, செய்தியாளர்கள் அவரிடம், ‘பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து நடக்கும் போராட்டம்’ குறி்த்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘பெட்ரோல், டீசல் விலை உலக சந்தை விலையுடன் தொடர்புடையது. ஒருநாள் விலை ஏறும், அடுத்த நாள் கணிசமாக குறையும். இந்த விலையை அமெரிக்கா தான் முடிவு செய்கிறது. எனவே ஒன்றிய அரசை குறை சொல்லக்கூடாது’ என்றார்.

Related Stories:

More