மாவட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் மழைவௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ நலத்திட்ட உதவி வழங்கினார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக மற்றும் திருவள்ளூர் தொகுதி திமுக சார்பில் தொடர்மழை காரணமாக பாதிக்கப்பட்ட 2 ஆயிரம் குடும்பங்களுக்கு திருவள்ளூரில் வெள்ள நிவாரணம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் சைக்கிள், மிதிவண்டிகள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா  நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி தலைமை வகித்தார். வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன் வரவேற்றார்.

இதில் மாநில இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ கலந்துகொண்டு 2 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி, பாய், போர்வை, மளிகை பொருட்கள், காய்கறிகள் மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் சைக்கிள்கள், மிதிவண்டிகள் உள்பட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதில், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், எம்எல்ஏக்கள் ஆ.கிருஷ்ணசாமி, டி.ஜெ.கோவிந்தராஜன், எஸ்.சந்திரன், திமுக நிர்வாகிகள் கே.திராவிட பக்தன் ஆதிசேஷன், ஒன்றிய செயலாளர்கள் கூளூர் எம்.ராஜேந்திரன், மோ.ரமேஷ், ச.மகாலிங்கம் தா.கிருஷ்டி, கே.அரிகிருஷ்ணன் மற்றும் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

ஆவடி: ஆவடி சட்டமன்ற தொகுதி திமுக சார்பில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் விழா ஆவடி தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் சா.மு.நாசர் தலைமை வகித்தார். உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ கலந்துகொண்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அரிசி, பாய், போர்வை, மளிகைப்பொருட்களை வழங்கினார். இதில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஜெ.ரமேஷ், வக்கீல் கு.சேகர், வீ.சிங்காரம், ஆவடி பகுதி செயலாளர்கள் ஜி.ராஜேந்திரன், பேபிசேகர், ஜி.நாராயணபிரசாத், பொன்.விஜயன், திருவேற்காடு நகரச் செயலாளர் என்.இ.கே.மூர்த்தி, திருநின்றவூர் பேரூர் செயலாளர் தி.வை.ரவி, ஆசீம்ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.  

கும்மிடிப்பூண்டி: பெருவாயல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். இதில், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் கி.வேணு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, முன்னாள் எம்எல்ஏக்கள் சிவாஜி, சேகர், ஒன்றியக்குழு துணைத்தலைவர் மாலதி குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் மு.மணிபாலன், முர்த்தி, ரமேஷ் ராஜ், சந்திரசேகர், சக்திவேல், நிர்வாகிகள் அறிவழகன், பாஸ்கரன், நமச்சிவாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பங்கேற்று மழையால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்கினார்.

* கொட்டும் மழையில்...

பூந்தமல்லி நகர திமுக சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி வைத்தீஸ்வரன் கோயில் தெருவில் நேற்று நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமை வகித்தார். ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, ஒன்றிய சேர்மன் பூவை ஜெயக்குமார், நகர செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக திடீரென மழை வெளுத்து வாங்கியது. அப்போது நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அரிசி, மளிகைப்பொருட்கள், பாய், போர்வை உள்ளிட்ட பல்வேறு நிவாரணப்பொருட்கள் அடங்கிய தொகுப்பை பாதிக்கப்பட்ட 2 ஆயிரம் குடும்பத்தினருக்கு வழங்கினார். மழையால் பொதுமக்கள் பாதிக்காமல் இருப்பதற்காக பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் காத்திருந்து நிவாரண பொருட்களை வாங்கிச்சென்றனர்.

Related Stories: