கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை 20 ரயில்கள் பகுதியாக ரத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அந்த வழித்தடத்தில் செல்லும் 20 ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக கன்னியாகுமரி - நாகர்கோவில் - திருவனந்தபுரம் வழித்தடங்களில் செல்லும் 20 ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, இன்று இயக்கப்பட இருந்த கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் (12634) ரயில் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் இடையேயும், சென்னை எழும்பூர் - குருவாயூர் (16127) ரயில் திருநெல்வேலி மற்றும் குருவாயூர் இடையேயும், கொல்லம் - சென்னை எழும்பூர் (16724) ரயில் கொல்லம் மற்றும் நாகர்கோவில் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதையடுத்து  கன்னியாகுமரி - நாகர்கோவில் - திருவனந்தபுரம் வழித்தடத்தடத்தில் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் மொத்தம் 20 ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

Related Stories: