×

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பாணர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமனம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை இடமாற்றம் செய்ய ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜி கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார். 2023ம் ஆண்டு ஓய்வு பெறவுள்ள இவரை தற்போது மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. 75 நீதிமன்றங்களோடு ‘சார்டர்ட் ஐகோர்ட்’ என்ற பெருமை கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து 3 நீதிபதிகள் மட்டுமே கொண்ட மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு சஞ்சிப் பானர்ஜி மாற்ற பரிந்துரைக்கப்பட்டதற்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது.

இந்த முடிவை மறு பரிசீலனை செய்யக்கோரி ஏற்கனவே 237 வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தனர். மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வழக்கறிஞர்கள் சிலர் அமைதி போராட்டம் நடத்தவும் முடிவெடுத்துள்ளனர். இதனிடையே நீதிபதி சஞ்சீப் பானர்ஜி இடமாற்றத்தை மறு பரிசீலனை செய்யக்கோரி மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், நளினி சிதம்பரம், பி.வில்சன், பி.எச்.அரவிந்த் பாண்டியன், என்.ஆர் இளங்கோ உள்ளிட்ட 31 பேர் தற்போது உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை இடமாற்றம் செய்ய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.



Tags : Chennai High Court ,Chief Justice ,Sanjeeb Panjee ,Majelaya High Court ,President ,Ramnath Kovind , Chennai High Court Chief Justice Sanjeeb Banerjee appointed Chief Justice of Meghalaya High Court: President Ramnath Govind approves
× RELATED சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம்