×

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் சிறை

புதுக்கோட்டை: விராலிமலையில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் சிறை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாதவன் என்பவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசின் தரப்பில் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்ற சம்பவம் நடைபெற்று 4 மாதங்களிலேயே புதுக்கோட்டை நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

Tags : Viralimala, Pugukota district , Life imprisonment
× RELATED ரூ.10,000 லஞ்சம்: எஸ்ஐ கைது