நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன் மாணவர்கள் போராட்டம்..!!

சென்னை: நீட் தேர்வு மற்றும் புதிய கல்வி கொள்கை ஆகியவற்றை ரத்து செய்ய கோரி சென்னையில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் உள்ள சாஸ்திரி பவன் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவன் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கை ஆகியவற்றை ரத்து செய்ய வலியுறுத்தி அவர்கள் தொடர் முழக்கங்கள் எழுப்பினர்.

மேலும், கோவை மாணவி தற்கொலைக்கு கண்டனம் தெரிவித்த மாணவர்கள், இதுபோன்ற கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். தொடர்ந்து சாஸ்திரி பவனை முற்றுகையிட மாணவர்கள் முயன்றதால் காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.

Related Stories:

More