×

ஜே.என்.யூ மாணவர்கள் மோதல்: டெல்லியில் நேற்றிரவு பரபரப்பு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் இடையே நேற்றிரவு 9.45 மணியளவில் இடதுசாரி அமைப்பை சேர்ந்த மாணவர்களுக்கும், பாஜக மாணவரணி அமைப்பை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதுதொடர்பாக ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவரும், இந்திய மாணவர் சம்மேளனத் தலைவருமான ஐஷி கோஷ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், பாஜக மாணவரணி அமைப்பான ஏபிவிபி அமைப்பு மீது குற்றம்சாட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘ஏபிவிபி குண்டர்கள் ஜேஎன்யூவில் வன்முறையில் ஈடுபட்டனர். மாணவர்களை தாக்கியது மட்டுமின்றி பல்கலைக்கழக வளாகத்தில் ஜனநாயக உரிமையை சீர்குலைத்துள்ளனர். ஜேஎன்யு பல்கலைக்கழக நிர்வாகம் மவுனமாக இருக்கிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எப்போது நடவடிக்கை எடுப்பார்கள்?’ என்று கேள்வி எழுப்பி மாணவர்கள் காயமடைந்த புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். அதேபோல், ஏபிவிபி மாணவர் அமைப்பின் சார்பில் வசந்த் கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Tags : JNU ,Delhi , JNU students clash: riots in Delhi last night
× RELATED உலக தரவரிசை வெளியீடு இந்தியாவின் சிறந்த பல்கலை. ஜேஎன்யு