சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் மயிலாப்பூர், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: தொடர் மழையால் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் மயிலாப்பூர் மற்றும் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை: வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு சென்னையில்  மழைநீர் பெருக்கு காரணமாக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

* மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், இலகு ரக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது, மாநகர பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள், லஸ் சந்திப்பிலிருந்து கச்சேரி சாலையை நோக்கி திருப்பிவிடப்படுகின்றது.

* பெரம்பூர் பேரக்ஸ் சாலை-அஷ்டபுஜம் ரோடு சந்திப்பில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், மாநகர பேருந்துகள் செல்ல முடியாத காரணத்தால் டவுட்டன் சந்திப்பில் இருந்து புளியந்தோப்பு நோக்கி செல்லும் மாநகர பேருந்துகள் பிரிக்லின் ரோடு, ஸ்டிராஹன்ஸ் ரோடு வழியே புளியந்தோப்பு சென்றடையும். அதேபோல் புளியந்தோப்பில் இருந்து டவுட்டன் செல்லும் பேருந்துகள் ஸ்டிராஹன்ஸ் ரோடு, பிரிக்லின் ரோடு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: