×

பொது இடங்களில் ஏற்படும் விபத்துகளில் பலியாவோருக்கு சமச்சீரான இழப்பீடு வழங்குங்கள்!: தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: பொது இடங்களில் ஏற்படும் விபத்துகளில் பலியாவோருக்கு சமச்சீரான இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சாலையில் சென்ற போது மரம் விழுந்து இருவேறு விபத்துகளில் பலியான முதியவர் மற்றும் சிறுவனின் குடும்பத்தினர் இழப்பீடு கோரி தாக்கல் செய்த வழக்குகளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் விசாரித்தார். அச்சமயம், பொது இடங்களில் ஏற்படும் விபத்துகளில் பலியாவோருக்கு இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக வேதனை தெரிவித்த நீதிபதி, ஒரு சில நிகழ்வுகளில் ஒரு கோடி ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படுகிறது எனவும் சில நிகழ்வுகளில் 1 லட்சம் மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்த பாரபட்சத்தை தவிர்க்க பொது இடங்களில் ஏற்படும் விபத்துகளில் பலியாவோருக்கு இழப்பீட்டை தீர்மானிக்க 8 வாரங்களில் உரிய விதிகளை வகுக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி இழப்பீடு கோரி 12 வாரங்களில் அரசுக்கு விண்ணப்பிக்க மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதி, அந்த விண்ணப்பங்கள் மீது புதிய விதிகள் அறிவிக்கப்பட்ட 8 வாரங்களில் முடிவை அறிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அரசு வழங்கும் இழப்பீடு என்பது பாதிக்கப்பட்டோர் காப்பீட்டு கோர சரியாக இருக்காது என குறிப்பிட்ட நீதிபதி, உள்கட்டமைப்புகளை முறையாக பராமரித்து இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். 


Tags : ICORD ,TN , Public place, accident, death, compensation, iCourt
× RELATED தனியார் வங்கி வசூலிப்பாளரிடம் ₹73,500 பறிமுதல்