ஒருமுறை ரூ.30,000 கொடுத்தால் மாதந்தோறும் ரூ.20,000 ஊதியம்: வேலையில்லா இளைஞர்களை குறிவைத்து பல கோடி மோசடி செய்த நபர் கைது..!!

திருச்சி: ஒருமுறை 30 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் மாதந்தோறும் 20 ஆயிரம் ஊதியம் பெறலாம் என திருச்சி மாநகர இளைஞர்களை குறிவைத்து பல கோடி மோசடி செய்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். திருச்சி தில்லை நகர் பகுதியில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் யூ -டியூப், பேஸ்புக், மின்னஞ்சல் மற்றும் ஆன்ராய்டு செயலியில் விளம்பரம் உருவாக்குவதற்கான வேலைவாய்ப்பு தருவதாக ஆசைவார்த்தை காட்டி வருவது அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சுமார் 500க்கும் மேற்பட்ட நபர்களிடம் வசூல் செய்து டிஜிட்டல் மார்க்கெட்டிங்  என்ற பெயரில் கோடி கணக்கில் பணமோசடி செய்ததாக அந்த நிறுவனத்தின் மீது அரவிந்த் என்பவர் திருச்சி மாநகர காவல் துறையிடம் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விசாரணை செய்த திருச்சி மாநகர காவல் துறையினர், இவ்வழக்கில் தொடர்புடைய மெர்வின் கிறிஸ்டோபர் என்பவரை தில்லை நகர் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் பல கோடி ரூபாய் மோசடி செய்தது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, மெர்வின் கிறிஸ்டோபர், அவரது தந்தை சேவியர் ராஜ், தாய் மேரி, சகோதரி மோனிகா ஜெனட், உறவினர் தம்பி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான மெர்வின் கிறிஸ்டோபரை கைது செய்து இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories:

More