சென்னையில் வரும் 17, 18ஆம் தேதிகளில் மீண்டும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

சென்னை: சென்னையில் வரும் 17, 18ஆம் தேதிகளில் மீண்டும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நவம்பர் 19ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய அந்தமான் கடற்பகுதியில் நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை தொடரும். திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், கரூர், திருச்சி, பெரம்பலூர், புதுச்சேரியில் கனமழை தொடரும்.

Related Stories:

More