×

உடல் உறுப்புகளை தானம் பெறுவதற்கு புதிய கட்டுப்பாடு: ஆதார் கட்டாயம் என தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு..!

சென்னை: உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கு ஆதார் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுவாக சிறிய வயதில் உயிரிழந்தவர்கள், மூளை சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள், விபத்தில் உயிரிழந்தவர்கள் போன்றவர்களின் உடலுறுப்புகள் அவர்களின் விருப்பத்திற்கிணங்க தானம் செய்யப்படுவதுண்டு. இதற்கு, சில கட்டுப்பாடும் இருந்தாலும், தற்போது தமிழக அரசு ஒரு புதிய கட்டுப்பாட்டை அரசிதழில் வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இணைய தளங்களில் பதிவு செய்வோர், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான நோயாளிகளை ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றுதல், உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வருவோர் ஆதார் எண் அடிப்படையில் அத்தகைய சேவைகளை பெறலாம்.

மேலும், தொடர்பில்லா சேவைகளை பெறவும், ஆதாரை கட்டாயமாக்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தனிநபருக்கு ஆதார் எண் ஒதுக்கப்படும் வரை, அவருக்கு தொடர்பில்லா சேவைகள் வழங்கப்பட வேண்டும். பொதுமக்கள், நோயாளிகளுக்கு ஆதாரின் அவசியம் பற்றி தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு அதில் தெரிவித்துள்ளது.

Tags : Organ, Donation, Aadhar, Government of Tamil Nadu
× RELATED எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை