திமுக சார்பில் வெள்ள நிவாரண முகாமில் தங்கியவர்களுக்கு உணவு

திருப்போரூர்: தொடர் மழையால் பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட குன்னப்பட்டு ஊராட்சியை சேர்ந்த பஞ்சந்தீர்த்தி கிராமத்தில் இருளர் சமுதாயத்தை சேர்ந்த 45  குடும்பங்களைச் சேர்ந்த 130 பேர் அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளி நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு திருப்போரூர் தெற்கு ஒன்றிய திமுக  சார்பில் திருப்போரூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சத்யா சேகர் இருளர் மக்களுக்கு உணவினை வழங்கினார்.

நிகழ்ச்சியில் திருப்போரூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பையனூர் சேகர், மாவட்ட கவுன்சிலர் ஜெயச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் விஜிமோகன், ஒன்றிய கவுன்சிலர் வினோத்குமார் கிளைக் கழக செயலாளர்கள் மோகன், நந்தகோபால், கங்காதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More