காஞ்சிபுரம் அருகே காயாரோகணீஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற  காயாரோகணீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் குரு பகவான் தனி சன்னதியில் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார். குரு பகவான் நேற்றுமுன்தினம் மாலை மகரம் ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு இடம் பெயர்ந்தார். இதைமுன்னிட்டு கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர், சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் பக்தர்கள் கலந்துகொண்டு குரு பகவானை வழிபட்டனர். முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், முன்னாள் எம்பி காஞ்சி பன்னீர்செல்வம், கோயில் செயலாளர் பூவழகி, தியாகராஜன், குமரன் உள்ளிட்ட பலரும் சாமி தரிசனம் செய்தனர்.இதுபோல் காஞ்சிபுரம்-வந்தவாசி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள  நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலிலும் குருபெயர்ச்சி விழா நடந்து. இதிலும் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: