காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற காயாரோகணீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் குரு பகவான் தனி சன்னதியில் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார். குரு பகவான் நேற்றுமுன்தினம் மாலை மகரம் ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு இடம் பெயர்ந்தார். இதைமுன்னிட்டு கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர், சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.