×

10 நிமிடத்தில் 19 இட்லி சாப்பிட்டவருக்கு ரூ.5000 பரிசு

பவானி:  துரித உணவுகளுக்கு மாற்றாக உடலுக்கு நன்மை பயக்கும் இட்லி குறித்து ஈரோடு மாவட்டம் பவானியில் இட்லி சாப்பிடும் போட்டி நேற்று நடத்தப்பட்டது. ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட போட்டியாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது. ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் சாப்பிட 10 நிமிடம் அனுமதி அளிக்கப்பட்டது.

குமாரபாளையத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி ராமலிங்கம் 19 இட்லிகளும், கல்லூரி மாணவர் ரவி 18 இட்லிகளும், மளிகை கடை வியாபாரி வில்லியம்ஸ் 15 இட்லிகளும் சாப்பிட்டு முதல் பரிசான ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசான ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசான ரூ.2 ஆயிரத்தை வென்றனர்.

Tags : Italians , Minute, itli, gift
× RELATED இத்தாலி வம்சாவளிகளுக்கு புரியாது: அமித்ஷா தாக்