×

மனிதர்களுக்கு 108 இருப்பதுபோல் கால்நடைகளுக்கு ‘109 ஆம்புலன்ஸ்’: மபி அரசு புதுமை திட்டம்

போபால்: நோய் பாதிப்புகள், விபத்தில் காயமடைவது போன்றவற்றால் பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க, ‘108 ஆம்புலன்ஸ்’ சேவை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஒன்றிய அரசின் நிதியில், மாநில அரசுகள் இந்த சேவையை அமல்படுத்தி வருகின்றன. இந்நிலையில், மனிதர்களே போலவே நோய்களால் அவதிப்படும் கால்நடைகளுக்கும் உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக, ‘109 ஆம்புலன்ஸ்’ சேவை திட்டத்தை அமல்படுத்த, மத்திய பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.
இம்மாநில தலைநகர் போபாலில், ‘இந்திய கால்நடை சங்கம்’ சார்பாக பெண் கால்நடை மருத்துவர்களுக்கான, ‘சக்தி-2021’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது.

இதில், இம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பங்கேற்று பேசுகையில், ‘109 என்ற உதவி மைய எண் மூலமாக கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை  வழங்குவதற்கான ஆம்புலன்ஸ் சேவை தொடங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இதன் மூலம், கால்நடைகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டிய அவசியமில்லை. மாட்டு சாணம், கோமியத்தில் இருந்து உரங்கள், பூச்சிக்கொல்லி, மருந்துகள் உட்பட பல்வேறு பொருட்களை தயாரிக்கப்படுகிறது. எனவே, இந்த தயாரிப்புகளுக்காக மாட்டு சாணத்தை அரசே கொள்முதல் செய்யவும் திட்டமிட்டுள்ளது. மாட்டு சாணம், கோமியத்தால் நாட்டின் பொருளாதாரமே உயரும்,” என்றார்.


Tags : Humans, Cattle, Ambulance, Mabi Government
× RELATED ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்