×

நியூயார்க் -டெல்லி இடையே நான்-ஸ்டாப் விமான சேவை: அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தொடங்கியது

புதுடெல்லி: உலகளவில் கொரோனா பரவும் முன்பாக, இந்தியா - அமெரிக்கா இடையே நேரடி ( நான்-ஸ்டாப்) மற்றும் ஒரு இடத்தில் நின்று (ஒன் ஸ்டாப்)  செல்லக் கூடிய விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இதில், பெரும்பாலும் ஒன்-ஸ்டாப் விமானங்களில் பயணம் செய்வதையே மக்கள் விரும்பினர். இந்நிலையில், கொரோனா பாதிப்புகளுக்குப் பிறகு, ஒன்-ஸ்டாப் விமானங்களில் பயணம் செய்யக்கூடிய மனநிலை, மக்களிடம் மாறி இருப்பதாக தெரிய வந்துள்ளது. கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வே இதற்கு காரணமாக கருதப்படுகிறது.

இதனால், இனிமேல் நான்-ஸ்டாப் விமான போக்குவரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க, அமெரிக்காவை சேர்ந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா உள்ளிட்ட சில விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதன்படி, நியூயார்க் -டெல்லி இடையே 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது முதல் நான்-ஸ்டாப் விமானத்தை இயக்கி உள்ளது. நியூயார்க்கில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை புறப்பட்ட இது, நேற்று முன்தினம் இரவு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. இதேபோல், பெங்களூரு- சியாட்டில் இடையிலான நேரடி விமானத்தை அடுத்தாண்டு மார்ச் முதல் தொடங்கவும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் முடிவு செய்துள்ளது.


Tags : New York ,Delhi ,American Airlines , New York, Delhi, Stop Airlines, American Airlines
× RELATED கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்