ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்த ஒன்றிய அமைச்சர்கள் குழு: மோடி அமைத்தார்

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான பாஜ ஆட்சி அமைந்து 7 வருடங்கள் ஆகின்றன. பாஜ ஆட்சியில் நாட்டின் முன்னேற்றத்துக்கு எதாவது முக்கிய திட்டங்கள் அமைந்துள்ளதா என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் வளர்ச்சி மேம்பாட்டை கருத்தில் கொண்டு 77 அமைச்சர்களை எட்டு குழுக்களாக பிரதமர் மோடி பிரித்துள்ளனர். இந்த 8 குழுக்களுடன் பிரதமர் மோடி தனித்தனியாக 5 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இது வரை 5 அமர்வுகள் நடந்து முடிந்துள்ளன.

இந்த ஆலோசனையின் போது தனிப்பட்ட செயல்திறன், திட்டங்களில் கவனம் செலுத்துதல், நடாளுமன்ற நடைமுறைகள் குறித்து கவுன்சிலிங் வழங்கப்பட்டது. எட்டு குழுக்களில் 77 அமைச்சர்களும் ஒரு பகுதியாக இருப்பர். ஒவ்வொரு குழுவிலும் ஒன்பது அமைச்சர்கள் இடம்பெற்றிருப்பார். இந்த குழுக்களுக்கு ஒன்றிய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, நரேந்திர சிங் தோமர், பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான், ஸ்மிருதி இராணி, அனுராக் தாக்கூர் ஆகியோர் ஒருங்கிணைப்பார்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

1.47 லட்சம் பயனாளிகள் கணக்கில் ரூ.709 கோடி நிதி

திரிபுரா மாநிலத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் கிராமிய திட்டத்தின் கீழ் 1.47 லட்சம் பயனாளிகளின் வங்கி கணக்கில் முதல் தவணையாக ரூ.709 கோடி நேரடியாக செலுத்தப்பட்டது. பிரதமர் மோடி கூறுகையில், ‘திரிபுரா ஏழை மாநிலம், மக்கள் அடிப்படை வசதியற்றவர்கள் என்று இனி யாரும் சொல்லமுடியாது.’ என்றார்.

Related Stories:

More