அமெரிக்காவில் தெலுங்கு படப்பிடிப்பில் மைக் டைசன்

சென்னை: சர்வதேச குத்துச்சண்டை வீரர் மைக் டைசனுடன் இணைந்து சண்டைக் காட்சியில் நடிப்பதற்காக, ஐதராபாத்தில் இருந்து நடிகர் விஜய் தேவரகொண்டா அமெரிக்கா சென்றுள்ளார். புரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படம், ‘லைகர்’. கரண் ஜோஹர், சார்மி, புரி ஜெகன்நாத் இணைந்து தயாரிக்கும் இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இதில் சர்வதேச குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்கிறார். அவர் நடிக்கும் முதல் இந்தியப் படம் இது. கதைப்படி அவர் விஜய் தேவரகொண்டாவின் குத்துச்சண்டை பயிற்சியாளர் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மைக் டைசனுடன் விஜய் தேவரகொண்டா இணைந்து நடிக்கும் காட்சிகளைப் படமாக்குவதற்காக ஸ்டண்ட் கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்புக் குழுவினர் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கு 15 நாட்கள் நடக்கும் படப்பிடிப்பில் மைக் டைசன், விஜய் தேவரகொண்டா பங்கேற்று நடிக்கின்றனர்.

Related Stories: