×

நாடாளுமன்ற குளிர்கால தொடரில் பெகாசஸ் உளவு பற்றி விவாதம் கிடையாது: ஒன்றிய அமைச்சர் திட்டவட்டம்

புதுெடல்லி: ‘நாடாளுன்ற குளிர்கால தொடரில் பெகாசஸ் விவகாரத்தை பற்றி விவாதிப்பதற்கு இடமே இல்லை,’ என்று ஒன்றிய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடரை வரும் 29 முதல் டிசம்பர் 23ம் தேதி வரையில் நடத்த ஒன்றிய அமைச்சரவைக் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த தொடரில் கடந்த முறையை போன்றே, பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரத்தை மீண்டும் எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து மாநிலங்களவை துணை தலைவரும், ஒன்றிய சிறுபான்மை துறை அமைச்சருமான முக்தர் அப்பாஸ் நக்வி அளித்துள்ள பேட்டி வருமாறு: மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை தலைவர் முடிவின் அடிப்படையில் அனைத்து விவகாரங்களையும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. கடந்த ஆண்டுகளில் நாடாளுமன்ற தொடர்களில் காங்கிரசின் செயல்பட்ட விதத்தை கவனிக்க வேண்டும். பிரதமர் மோடி ‘ஜனநாயக விவாத்துக்கு’ இடம் கொடுக்கிறார். ஆனால் ‘வம்சாவளியினர் இடையூறு’ செய்கின்றனர். உறுதியான எதிர்க்கட்சியைதான் பாஜ விரும்புகிறது.

ஆனால், அவை உதவியற்றவையாக இருப்பது துரதிருஷ்டவசமானது. காங்கிரஸ் என்ன முடிவு எடுத்தது என்பது முக்கியமல்ல. ஒருமனதாக என்ன முடிவெடுத்தாலும் அதற்கு அரசு துணை நிற்கும். ெபகாசஸ் விவகாரத்தில் உண்மை இல்லை. விவாதத்தின் அடிப்படையில் கதைகள்தான் வளரும். இதை வைத்து அவை நடவடிக்கையை சீர்குலைக்க விரும்புவது நியாயமில்லை. அதனால், இந்த தொடரில் இந்த பிரச்னை பற்றி விவாதிப்பதற்கு வாய்ப்பே இல்லை. இந்த தொடரை மக்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும். இதற்கு காங்கிரசும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போதும் தேர்தல்; இப்போதும் தேர்தல்
நக்வி மேலும் கூறுகையில், ‘‘கடந்த முறை அனைத்து கட்சி கூட்டம், சபை அலுவல் குழு கூட்டம் ஆகிய நடத்தப்பட்டு பல்வேறு விவாதங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனாலும், கடைசி நேரத்தில் எதிர்க்கட்சிகள் பெகாசஸ் பிரச்னையை கையில் எடுத்து போராடினர். அப்போதும் சில மாநிலங்கள் சட்டமன்ற தேர்தலை சந்தித்தன. தற்போதும் அதே நிலைதான். 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. இதை மனதில் வைத்து எதிர்க்கட்சிகள் பிரச்னையை எழுப்பினால் நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு அர்த்தமே  இல்லாமல் போய்விடும்,’’ என்றார்.

Tags : Parliamentary Pegasus spy, Union Minister
× RELATED டெல்லி வக்பு வாரிய பணி நியமன முறைகேடு...