ஆந்திராவில் நிலநடுக்கம் மக்கள் பீதி

திருமலை: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நேற்று காலை 7.13 மணியளவில் பயங்கர சத்தத்துடன் நிலநடுக்கம் உணரப்பட்டது. சுமார் 5 முதல் 8 வினாடிகள் வரை நீடித்த நிலநடுக்கம், பாலய்யா சாஸ்திரி லே அவுட், சீதம்மாதாரா, அல்லிபுரம் பங்காரம்மா மெட்டா, வேப்பகுண்டா, சிம்மாசலம், அரிலோவா பகுதி வரை நீடித்தது.  நிலநடுக்கத்தின்போது வீட்டில் இருந்த பொருட்கள் உருண்டன. இதனால், மக்கள் அலறியடித்தபடி வீட்டில் இருந்து வெளியேறினர். காலை 10 மணி வரை அச்சத்தில் இருந்த அவர்கள், பின்னர் வீடுகளுக்கு திரும்பினர்.

இந்நிலையில், அல்லிபுரம் பகுதியில் சில நாட்களாக பெய்து வரும் மழையால் பழைய வீட்டின் சில பகுதி இடிந்து விழுந்த நிலையில், நேற்று நிலநடுக்கத்தால் மேலும் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. விசாகப்பட்டினத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் வங்க கடலில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த ந நிலநடுக்கத்தின் மையம் இருந்தது.

Related Stories: