அதிமுக ஆட்சி நடவடிக்கையால் தான் வெள்ளத்திலிருந்து சென்னை தப்பியது: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார்

பெரம்பூர்: அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் தான் சென்னை மழை வெள்ள பாதிப்பில் இருந்து தப்பியது, என மாஜி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால், பிரட், அரசி உள்ளிட்ட நிவாரணங்களை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அதிமுக ஆட்சியில் சென்னையில் உள்ள மழைநீர் வடிகால்களை நவீன இயந்திரம் மூலம் தூர்வாரி, பராமரித்து வந்தோம். ஆனால் தற்போது பராமரிப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் தான், தற்போது சென்னை மழை வெள்ளத்தில் இருந்து தப்பித்துள்ளது. விரைவில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வந்துவிடும் என சொல்கின்றனர். தற்போது வரை பல இடங்களில் மின்சாரம் இல்லை’’ என்றார்.

Related Stories: