×

குமரியில் நிலச்சரிவு காரணமாக எழும்பூர்-கொல்லம் ரயில் பகுதியாக ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: குமரியில் நிலச்சரிவு காரணமாக எழும்பூர்-கொல்லம் இடையே  இயக்கப்படும் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே  அறிவித்துள்ளது. கன்னியாகுமரி-நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையே ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது  குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: நாகர்கோவில்-திருவனந்தபுரம்- நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ரயில் (06426, 06427), திருவனந்தபுரம்-  நாகர்கோவில் விரைவு பயணிகள் ரயில் (06435) நேற்று ரத்து செய்யப்பட்டது. மேலும் சென்னை எழும்பூர்-கொல்லம் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் (16723)  நாகர்கோவில்-கொல்லம் இடையேயும், கொல்லம்- சென்னை எழும்பூர் இடையே  இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (16724) நேற்று பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் ரயில் கொல்லம்-நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்பட்டது. அதைப்போன்று பெங்களூர்வில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட பெங்களூரு- குமரி விரைவு ரயில் (16526) திருவனந்தபுரம்-குமரி இடையே ரத்து செய்யப்படுகிறது.

Tags : Kumari , Egmore-Kollam section canceled due to landslide in Kumari: Southern Railway notice
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...