போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி வெள்ளம் பாதித்த பகுதிகளில் தள்ளுவண்டியில் காய்கறிகள் விநியோகம்: மழை நீர் வெளியேற்றும் பணியில் காவலர் பேரிடர் மீட்பு குழுவினர் தீவிரம்

சென்னை: வங்கக்கடலில் உருவாக காற்றழுத்த மண்டலம் காரணமாக சென்னையில் பெய்த கன மழையால் மாநகரம் முழுவதும் வெள்ளக்காடானது. குடியிருப்புகள், சாலைகள் என தாழ்வான பகுதிகளில் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்து கடல் போல் காட்சியளித்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4,760 பேரை மாநகர போலீசார் மீட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைத்தனர். இதற்கான போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி 13 காவலர் பேரிடம் மீட்பு குழுவினர் முழு வீச்சியில் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக கன மழை இல்லையேன்றாலும், அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இதனால் மாநகரின் தாழ்வான பகுதிகளில் இன்னும் மழை நீர் வெளியே வில்லை. இதையடுத்து 13 காவலர் பேரிடர் குழுக்கள் ராட்சத இயந்திரங்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளில் சுழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

இதற்கிடையே வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் கமிஷனர் உத்தரவுப்படி கடந்த 3 நாட்களாக மாநகரும் முழுவதும் 12 துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, குடிநிர், மருந்துகள், போர்வைகள், பால்பாக்கெட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதைதொடர்ந்து சுதந்திரமாக வெள்ள நீரை விட்டு வெளியே வரமுடியாத பகுதிகளில் நேற்று காய்கறிகள் போலீசார் சார்பில் வழங்கப்பட்டது.

குறிப்பாக புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான குழுவினர் நேற்று புளியந்தோப்பு சரகத்திற்கு உட்பட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மற்றும் காவலர் குடியிருப்பில் உள்ளவர்களுக்கு தள்ளுவண்டியில் காய்கறி தொகுப்பினை வழங்கினர். இதேபோல் மாநகர 12 காவல் மாவட்டத்திலும் போலீசார் மக்களுக்கு காய்கறிகள், பால், மருந்துகள் வழங்கினர். மேலும், பெரவள்ளூர் பகுதியில் உள்ள 70 அடி சாலை மற்றும் சிவ இளங்கோ சாலையில் சாக்கடை அடைப்பால் தேங்கியுள்ள தண்ணீரை காவலர் பேரிடர் மீட்பு குழுவினர் சரிசெய்து போக்குவரத்து சரிசெய்தனர். இதுபோல் மாநகரம் முழுவதும் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: