×

ரசிகர்களால் அச்சுறுத்தல் இல்லை: ஹசன்அலியின் இந்திய மனைவி பேட்டி

துபாய்: உலக கோப்பை டி.20 தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது. 19வது ஓவரில் ஆஸி. வீரர் மேத்யூ வேட்டின் கேட்சை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி தவறவிட்டதால் அடுத்த 3 பந்தில் ஹாட்ரிக் சிக்சர் அடித்து வேட் அணியை வெற்றிபெற வைத்தார். இதனால் ஹசன்அலி மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவரின் குடும்பத்திற்கு ரசிகர்களிடம்இருந்து மிரட்டல்கள்வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் அவரின் மனைவி ஷமியா அர்ஸு, பாகிஸ்தான் ரசிகர்களிடம் இருந்து தனக்கோ, தனது கணவருக்கோ, மகளுக்கோ அச்சுறுத்தல்கள் வரவில்லை என தெரிவித்துள்ளார். சமுக வலைதளங்கள் வழியாக அச்சுறுத்தல் வந்ததாக கூறப்படுவது முற்றிலும் தவறானது என அவர் இஸ்டாகிராமில் மறுத்துள்ளார். ஷமியா அர்ஸு இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். இன்ஜினியரான இவர் அமீரகத்தில் பணியாற்றியபோது ஹசன் அலியுடன் காதல் ஏற்பட்டு கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு  மகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Hanalli , No threat from fans: Interview with Hassan Ali's Indian wife
× RELATED டி20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை...