டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ் தொடர்: அரையிறுதிக்கு படோசா தகுதி

குவாடலஜரா: டாப் 8 வீராங்கனைகள் பங்கேற்கும் டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ் தொடர் மெக்சிகோவின் குவாடலஜரா நகரில் நடந்து வருகிறது. 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடக்கிறது. இன்று நடந்த போட்டியில், கீச்சன் இட்சா பிரிவில், கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி. ஸ்பெயினின் பவுலா படோசா மோதினர். இதில் 7-6,6-4 என்ற செட் கணக்கில் படோசா வெற்றிபெற்றார். முதல் போட்டியில் சபலென்காவை வீழ்த்திய படோசா, இட்சா பிரிவில் முதல் இடத்தை பிடித்து அரையிறுதியை உறுதி செய்தார்.

தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில், பெலாரசின் 2ம் நிலை வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, போலந்தின் இகா ஸ்வியாடெக் மோதினர். இதில் சபலென்கா 2-6,6-2,7-5 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

Related Stories:

More