பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் நடிகரின் சகோதரி போட்டி: சண்டிகரில் அறிவிப்பு

சண்டிகர்: பஞ்சாப் பேரவை தேர்தலில் பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் சகோதரி மால்விகா சூட் போட்டியிட உள்ளதாக, அவர் தெரிவித்தார். பாலிவுட் நடிகர் சோனு சூட், ெகாரோனா நெருக்கடியின் போது புலம்பெயர்ந்த  தொழிலாளர்கள், நோயாளிகள், ஏழைகள், பாதிக்கப்பட்டோர் என பலருக்கும் பல்வேறு  வகைகளில் உதவிகள் செய்தார். இவரது உதவியை சர்வதேச ஊடகங்களும் பாராட்டின. மக்கள் மத்தியில் செல்வாக்கை பெற்ற சோனு சூட்டை, அரசியலில் இழுக்க பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வலைவிரித்தன. ஆனால், அவர் அரசியலில் இருந்து விலகி இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் இருந்து சுமார் 170 கி.மீ தொலைவில் உள்ள மோகாவில் செய்தியாளர்களை சோனு சூட் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘எனது சகோதரி மால்விகா சூட், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள பஞ்சாப் தேர்தலில் போட்டியிடுவார். எந்த கட்சி சார்பில் போட்டியிடுவார் என்பதை தற்போது தெரிவிக்க மாட்ேடன்’ என்றார். முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன் பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை சந்தித்தார். அதேபோல் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சோனு சூட் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More