×

மத்திய குற்றப்பிரிவு மற்றும் அமலாக்கத்துறை இயக்குனர் பதவிக்காலத்தை நீட்டிக்கும் அவசரச் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்.!

டெல்லி: மத்திய குற்றப்பிரிவு மற்றும் அமலாக்கத்துறை இயக்குனர் பதவிக்காலத்தை நீட்டிக்கும் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சிபிஐ, ஈடி இயக்குனர் பதவியை 3 ஆண்டில் இருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தும் அவசரச் சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
அமலாக்க இயக்குநரகம் (ED) மற்றும் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) இயக்குநர்களின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கும் இந்திய அரசு அவசரச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதிகபட்சம் 3 ஆண்டுகள் என இருந்த பதவிக்காலத்தை 5 ஆண்டுகள் வரை நீடிப்பு செய்ய அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.தற்போது நாடாளுமன்றம் நேரடியாக செயல்படவில்லை என்பதால்,நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறவில்லை. எனினும்,இந்த மாதம் இறுதியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடும் என்று கூறப்படும் நிலையில் அதற்கு முன்னதாகவே,அமலாக்க இயக்குநரகம் (ED) மற்றும் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) இயக்குநர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் இந்த சட்டம் தற்போது அவசரச்சட்டமாக கொண்டு வரப்படுவதாக மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Tags : President ,Director of Federal Crime and Enforcement , President approves emergency law to extend tenure of Director of Federal Crime and Enforcement
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...