ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வலங்கைமான்: வலங்கைமான் அடுத்த ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் நேற்று நடைபெற்ற குரு பெயர்ச்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கும்பகோணம் மன்னார்குடி சாலையில்திருவாரூர் மாவட்டம்வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில் ஏலவார்குழலி சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோயில் உள்ளது. இது திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலமாகும் நவகிரகங்களில் குரு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது ஆண்டு தோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிப்பதையே குரு பெயர்ச்சி என்கின்றோம். இந்த ஆண்டு குருபகவான் நேற்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரவேசித்தார்.

அதனை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் விநாயகர் வழிபாட்டுடன் குரு பெயர்ச்சி முதல் கால யாகம் தொடங்கி இரவு 8.30 மணிக்கு முதற்கால பூர்ணாகுதி யுடன் நிறைவடைந்தது.அதனை அடுத்து நேற்று அதிகாலை 3:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகள் தொடங்கப்பட்டு 5 மணியளவில் மஹா பூர்ணாகுதி நடைபெற்றது. பின்னர் குரு பகவானுக்கு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றது. குருபெயர்ச்சி குரு பகவான் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் கலங்காமல் காத்த விநாயகர் ஆபத்சகாயேஸ்வரர் ஏலவார்குழலி,வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சனீஸ்வர பகவான் உள்ளிட்டவைகளுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது குருபெயர்ச்சி விழாவின் முக்கிய நிகழ்வாக மாலை 6:21 மணிக்கு குருபெயர்ச்சி மகாதீபாராதனை நடைபெற்றது குரு பெயர்ச்சியை முன்னிட்டு ரிஷபம் கடகம் கன்னி விருச்சிகம் தனுசு கும்பம் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் தங்களது பெயர் நட்சத்திரம் ராசி கோத்திரம் லக்கனம் ஆகிய முழு விவரங்களுடன் செல்போன் எண்ஆகிய விபரங்களுடன் ரூபாய் 400 மணியார்டர் அல்லது டிடி எடுத்து உதவி ஆணையர் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் சுவாமி திருக்கோயில் (குரு பரிகார ஸ்தலம்).வலங்கைமான் தாலுக்கா திருவாரூர் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைத்து குருபகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலர் உடன் பிரசாதத்தை பெற்றுக்கொள்ளலாம் என குரு கோயில் உதவி ஆணையரும் செயல் அலுவலருமான தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.அறநிலையத் துறை சுகாதாரத் துறை காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் மோகன் அறிவுறுத்தலின்படி கிராம ஊராட்சியின் சார்பில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப் பட்டிருந்தது. மேலும் கிராம ஊராட்சி சாலைகள் அனைத்தும் தூய்மை படுத்தப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது . விழாவில் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், முன்னாள் அறங்காவல் குழு தலைவர் அன்பரசன் தட்சிணாமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் மோகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories:

More