கொடைக்கானலில் மலைகளின் இளவரசியை நாடும் சுற்றுலாப்பயணிகள்

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை குறைந்ததால், வார விடுமுறையை கொண்டாட சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து  வந்தது. கடந்த 2 தினங்களாக மழை குறைந்ததையடுத்து நேற்று சுற்றுலாப்பயணிகள் வருகை ஓரளவு இருந்தது. மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண் பாறை, பிரையண்ட்  பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட அனைத்து  சுற்றுலா இடங்களிலும் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்.

கொடைக்கானலில் நேற்று அவ்வப்போது சாரல் மழையோடு வெயிலும் அடித்தது. இந்த இரண்டு மாறுபட்ட சூழல்களையும், ஏரி மற்றும் தூண்பாறை பகுதியில் தவழும் மேகமூட்டங்களையும் சுற்றுலாப்பயணிகள் வெகுவாக ரசித்தனர். வார விடுமுறையை கொண்டாட வந்த சுற்றுலாப் பயணிகளால் வியாபாரிகள்  மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories:

More