×

12-ம் வகுப்பு மாணவி தற்கொலை விவகாரம்: தலைமறைவாக இருந்த சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வர் பெங்களூரில் கைது

பெங்களூரு: கோவை சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டார். கோவையில் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளி முதல்வரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரில் தலைமறைவாக இருந்த மீரா ஜாக்சனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வர் மீது போக்சோ வழக்கு, பள்ளி முதல்வரை பிடிக்க இரு தனிப்படைகள் அமைக்கபட்டுள்ளதாக துணை ஆணையர் ஜெயசந்திரன் கூறியிருந்தார். கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த தம்பதியின் மகள், ஆர்.எஸ். புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். 2 மாதங்களுக்கு முன்பு திடீரென வேறு பள்ளியிலும் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அந்த மாணவி வியாழக்கிழமை மாலையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த விவகாரத்தில் சின்மயா பள்ளி இயற்பியல் ஆசிரியர், மிதுன் சக்கரவர்த்தி, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக மாணவி எழுதிய கடிதம் கிடைத்தது. ஆர்.எஸ்புரம் காவல்நிலையத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விவகாரத்தில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புகாருக்கு ஆளான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உடந்தையாக செயல்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மாதர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இதற்கிடையே, ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை வரும் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Sinmaya Vidyalaya ,school ,Bengaluru , 41st, year, full capacity, Mettur Dam
× RELATED நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களித்தேன்