×

2015ம் ஆண்டு போல எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் செம்பரம்பாக்கம் ஏரி உட்பட 4 ஏரிகளின் உபரிநீரை திறந்து சாதித்த நீர்வளத்துறை

* 5,000 முதல் 10,000 கனஅடி வரை நீர்வரத்து இருந்தும் திறம்பட கையாண்ட அதிகாரிகள்

சென்னை: எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு செம்பரம்பாக்கம் உட்பட 4 ஏரிகளின் உபரி நீரை திறந்து நீர்வளத்துறை அதிகாரிகள் சாதித்தனர். ெசன்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை நீர்த்தேக்கம் ஆகிய 5 ஏரிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஏரிகளுக்கு வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் மழைநீர் தான் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இந்நிலையில் கடந்த 6ம் தேதி முதல் தொடர்ந்து பெய்த மழை காரணமாக  5 ஏரிகளிலும் நீர்  நிரம்பியது.  இதன் காரணமாக, கடந்த 2015ம் ஆண்டை போன்று செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் அவசரமாக தண்ணீர் திறந்து விட்டதால் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்ததை போன்ற நிலைமை மீண்டும் வரக்கூடாது என்பதால் தண்ணீர் திறப்பில் நீர்வளத்துறை அதிக கவனம் செலுத்தியது. குறிப்பாக, வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்க்கும் என்று தெரிந்தவுடனேயே ஏரியில் 3 அடி வரை காலியாக வைக்கப்பட்டது. 2 அடி திறந்தாலே போதும். ஆனால், நாங்கள் 3 அடி வரை வைத்திருந்தோம்.

இதற்கு காரணம், ஒரே நேரத்தில் ஏரிக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வந்தாலும், அவற்றை உடனடியாக திறக்க வேண்டிய அவசியம் இருக்காது. வெறும் 2 ஆயிரம் கன அடி வரை மட்டுமே திறந்து விடும் வகையில் ஆரம்பத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மாதிரியான சூழ்நிலையில், அடையாறு ஆற்றில் ஏற்கனவே, 9 ஆயிரம் கன அடி வரை சென்றதால், வெள்ள நீர் கரைபுரண்டு ஓடியது. 7ம் தேதி மாலை 6 மணி நிலரப்படி 2095 கன அடியும், 9ம் தேதி 2 ஆயிரம் கன அடியும், 11ம் தேதி 2151 கன அடியும், 12ம் தேதி 2146 கன அடியும் திறக்கப்பட்டன.  

புழல் ஏரியில் இதே நிலைமைதான். ஏரியில் 10 ஆயிரம் கன அடி வரை நீர்வரத்து இருந்த போது, கூட நாங்கள் 2218 கன அடி தான் திறந்து விட்டோம். கடைசி வரை உபரி நீர் திறப்பை 2,700 கன அடிக்கு மேல் தாண்டாமல் பார்த்துக்கொண்டோம். ேசாழவரம் ஏரியிலும் இயல்பான அளவே தண்ணீர் திறக்கப்பட்டது. பூண்டி ஏரியை பொறுத்தவரையில் எவ்வளவு தண்ணீர் திறந்து விட்டாலும் கொசஸ்தலையாறு வழியாக கடலில் எளிதாக கலந்து விடும். ஏரிகளும், மக்களும் பாதுகாப்பாக இருக்கும் நோக்கில் தண்ணீர் திறக்கப்பட்டன என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Department of Water Resources ,Sembarambakkam Lake , 2015, Impact, Sembarambakkam Lake, Water Resources
× RELATED நீர்வளத்துறையில் செயல்படுத்தப்பட்டு...