ஜி.கே.வாசன் கோரிக்கை கைத்தறி, விசைத்தறி தொழிலாளர் நலன் காக்க வேண்டும்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் திருப்பூர், கரூர், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சுமார் ₹5 கோடி ஜவுளி உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், சுமார் 50 லட்சம் பேர் விசைத்தறி தொழிலையும், சுமார் 5 லட்சம் பேர் கைத்தறி தொழிலையும் நம்பி வாழ்கிறார்கள். ஜவுளி மற்றும் அதை சார்ந்த தொழில்களுக்கு நூல்தான் மூல ஆதாரம். இப்போது மீண்டும் ஒரு சிப்பம் நூலின் விலை ₹1000 உயர்ந்துள்ளதால் உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் கவலை அடைந்துள்ளனர்.

நூல் விலையை குறைக்க ஜவுளி தொழிலில் ஈடுபடுபவர்கள் கோரிக்கை வைத்தபோதும் இன்னும் விலை குறையவில்லை. இதனால் ஒரு கோடி பேர் பாதிக்கப்படுவார்கள். ₹9 ஆயிரத்துக்கு விற்ற ஒரு சிப்பம் நூல், கடந்த 50 நாட்களில் படிப்படியாக உயர்ந்து 14 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் நூல் விலை குறைய உடனடியாக நடவடிக்கை எடுத்து தொழிலாளர்கள் நலன் காக்க வேண்டும்.

Related Stories:

More