×

கேல் ரத்னா நீரஜ்

புதுடெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்) உள்பட 12 வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உயரிய மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கி கவுரவித்தார். தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா, ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்தது. நீரஜ் சோப்ரா (தடகளம்), ரவி குமார் (மல்யுத்தம்), லவ்லினா போர்கோகெய்ன் (பாக்சிங்), பி.ஜே.ஜேஷ் (ஹாக்கி), அவ்னி லெகரா (பாரா துப்பாக்கிசுடுதல்), சுமித் அன்டில் (பாரா தடகளம்), பிரமோத் பகத், கிருஷ்ணா நாகர்  (பாரா பேட்மின்டன்), மணிஷ் நர்வால் (பாரா துப்பாக்கிசுடுதல்), மிதாலி ராஜ் (கிரிக்கெட்), சுனில் செட்ரி (கால்பந்து), மன்பிரீத் சிங் (ஹாக்கி) ஆகியோர் கேல் ரத்னா விருது பெற்றனர். ஷிகர் தவான் (கிரிக்கெட்) உள்பட 35 வீரர், வீராங்கனைகள் அர்ஜுனா விருது பெற்றனர்.

Tags : Kale Ratna, Neeraj
× RELATED அனைத்துவிதமான கிரிக்கெட்...