×

எக்ஸ்பிரஸ்,மெயில் ரயில்களில் மீண்டும் பழைய கட்டணம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஜூன் 2020 முதல் முழுமையான ஊரடங்கை தொடர்ந்து ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்ட பிறகு, இரண்டு வகையிலான சிறப்பு ரயில்களை ரயில்வே அறிமுகப்படுத்தியது. இதில் மெயில்/எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்களில் கொரோனாவுக்கு முன் இருந்த வழக்கமான ரயில் சேவைகளுடன் ஒப்பிடும்போது கூடுதல் கட்டணம் இல்லை. இரண்டாவது வகையான விடுமுறை/பண்டிகை கால சிறப்பு ரயில்களில் தட்கல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இந்நிலையில் அனைத்து சேவைகளையும் வழக்கமான ரயில் சேவைகளாக இயக்க ரயில்வே வாரியம் முடிவு எடுத்துள்ளது. இந்த முடிவை செயல்படுத்த, இரண்டு விஷயங்களைச் செய்ய வேண்டும். ஒன்று, அனைத்து தட்கல் கட்டணத்தையும் சாதாரண கட்டணமாக குறைக்க வேண்டும். இரண்டாவதாக, பூஜ்ஜியத்தில் தொடங்கும் அனைத்து ரயில் எண்களையும் வழக்கமான ரயில் சேவைகளின் எண்களாக மாற்ற வேண்டும்.அதன்படி அனைத்து ரயில்களும் விழாக்கால சிறப்பு ரயில்களில் இருந்து வழக்கமான சேவைகள் வரை கட்டண திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணி சென்னை டேட்டா சென்டரில் முடிக்கப்பட்டு, பயணிகள் இப்போது பழைய கட்டணத்தில் முன்பதிவு செய்து வருகின்றனர். ரயில் எண் மாற்றங்களைப் பொறுத்தவரை முழுவீச்சில் நடத்து வருகிறது. நாள்தோறும் 500 ரயில்களில் பேட்ஜ் எண் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அடுத்த வாரத்தில் 3,000க்கும் மேற்பட்ட ரயில்களில் எண் மாற்றம் செய்யப்பட்டு விடும். இப்பணியை சிஆர்ஐஎஸ் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Southern Railway , Express, mail train, old fare, railway
× RELATED மெமு எக்ஸ்பிரஸ் ரயில் 3 நாட்கள் ரத்து வேலூர் கன்டோன்மென்ட்- அரக்கோணம்