×

டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ் தொடர்: அனெட், முகுருசா வெற்றி

குவாடலஜரா: டாப் 8 வீராங்கனைகள் பங்கேற்கும் டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ் தொடர் மெக்சிகோவின் குவாடலஜரா நகரில் நடந்து வருகிறது. 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடக்கிறது. இதில் இன்று நடந்த போட்டியில், தியோதிஅகான் பிரிவில் செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, எஸ்தோனியாவின் அனெட்கொன்டாவெய்ட் மோதினர். இதில் அனெட் 6-4 , 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் இதே பிரிவில் ஸ்பெயினின் கார்பின் முகுருசா,செக்குடியரசின் பார்போரா கிரெஜிகோவா மோதினர். இதில் முதல்செட்டை கிரெஜிகோவா 6-2 என கைப்பற்றினார். 2வது செட்டை 6-3, 3வது செட்டை 6-4 என முகுருசா கைப்பற்றி வெற்றிபெற்றார்.


Tags : WTA Finals Tennis Series ,Annette ,Muguruza , WDA Bins Tennis Series: Annett, Burus
× RELATED டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் டென்னிஸ் போராடி வென்றார் இகா