×

காற்று மாசு உச்சம் அடைந்து வருவதால் மக்கள் வெளி நடமாட்டத்தை கட்டுப்படுத்துக : டெல்லி அரசுக்கு ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை!!

டெல்லி : காற்று மாசு உச்சம் அடைந்து வருவதால் டெல்லி முடங்கும் நிலைக்கு தள்ளப்படும் என்று ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அவசரகால ஏற்பாடுகளுக்கு தயாராக இருக்குமாறு டெல்லி அரசை கேட்டுக் கொண்டுள்ளது. தலைநகர் டெல்லியில் பல மாதங்களாக காற்று மாசு அதிகரிப்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. வாகன நெரிசல் காரணமாகவும் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர் கழிவுகளை எரிப்பதாலும் டெல்லியின் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிலேயே இருந்து வருகிறது. இதற்கிடையில் தடை விதிக்கப்பட்ட போதும் டெல்லியில் பட்டாசுகள் வெடித்ததால் காற்று மாசு மேலும் கூடியது.

இதன் தொடர்ச்சியாக பகல் வேலைகளிலேயே சாலையில் வாகன ஓட்டிகள் விளக்குகளை எரியவிட்டபடி  செல்லும் நிலை உள்ளது. டெல்லி ஒட்டுமொத்த காற்றின் தர குறியீடு உச்சபச்சமாக 470 ஆக இருந்ததாக ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த நிலை 48 மணி நேரம் தொடரும் பட்சத்தில் பள்ளிகளை மூட வேண்டும் தனியார் கார்கள் இயக்கத்தில் ஒற்றைப்படை, இரட்டைப்படை வாகன கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் மற்றும் கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என்றும் ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வாகன இயக்கத்தை 30% ஆக குறைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வெளி நடமாட்டத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. இல்லையெனில் பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


Tags : Union Pollution Control Board ,Delhi government , ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
× RELATED விதிகளை மீறி நியமனம் டெல்லி அரசு...