×

பெங்களூரில் 7 டிகிரி செல்ஸியஸ் வரை சென்ற வெப்பநிலை : வாட்டி வதைக்கும் கடும் குளிர்!!

பெங்களூர்: பெங்களூரில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருவதால்  வெப்பநிலை குறைந்து மிகவும் குளிரான வானிலை நிலவி வருகிறது. பெங்களூர் எப்போதும் மிகவும் குளிரான நகரம் ஆகும். மே மாதத்தில் கூட பெங்களுரில் குளிர் அடிக்கும், கோடை காலத்தில் கூட அங்கு மழை பெய்யும்.எப்போதும் ஜில் ஜில், கூல் கூல் என்று இருக்கும் பெங்களூரில் கடந்த இரண்டு நாட்களாக மிக அதிக அளவில் குளிர் நிலவுகிறது. வெப்பநிலை திடீர் என்று குறைந்து இருக்கிறது. இதனால் ஊர் மொத்தத்திற்கும் சேர்த்து வானத்தில் ஏசி போட்டது போல இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று பெங்களுருவில் வெப்பநிலை 7 டிகிரி செல்ஸியஸ் வரை சென்றுள்ளது. இதனால் குளிர் மக்களை வாட்டி எடுத்தது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி வியாழன் அன்று மாலை 5.30 மணி நிலவரப்படி, பெங்களூரு நகரில் அதிகபட்ச வெப்பநிலை 19.8 ° C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 18 ° C ஆகவும் பதிவாகியுள்ளது. நகரத்திலிருந்து சிறிது தொலைவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 20°C மற்றும் 17.8°C ஆக பதிவாகியுள்ளது.

Tags : Bengaluru , பெங்களூர்
× RELATED பெங்களூரு பள்ளி அருகே...