ஸ்ரீநகரில் தாக்குதல் நடத்த சதி: மனித வெடிகுண்டு சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்:  ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த இருந்த தீவிரவாதியை போலீசார் சுட்டுக்கொன்றனர். ஜம்மு காஷ்மீரின் பெமினாவில் உள்ள ஹம்தானியா பகுதியில் தீவிரவாதி பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்தனர். தீவிரவாதியை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதி போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினான். போலீசார் நடத்திய பதிலடியில் தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். கொல்லப்பட்ட தீவிரவாதி ஹமிர் ரியாஸ், முஜாகிதீன் கஸ்வாதுல் ஹிந்த் என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவன்.

மேலும் ஸ்ரீநகரில் தற்கொலை தாக்குதலை நடத்த திட்டமிட்டு இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு புல்வாமாவில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவனின் உறவினர் ஹமிர் ரியாஸ் என்பதும் தெரியவந்துள்ளது.

Related Stories: