×

இந்தியா ஏ அணியில் ஹனுமா, அபராஜித்

மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்காத ஹனுமா விஹாரி, பிரித்வி ஷா ஆகியோருக்கு  தென் ஆப்ரிக்கா செல்லும் இந்தியா-ஏ அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா-ஏ அணி, அங்கு  3 டெஸ்ட் போட்டிகளில் (4 நாள்) விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் புளோயம்போன்டீனில் நவ. 23ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்தியா ஏ அணி நேற்று அறிவிக்கப்பட்டது. நியூசி.க்கு எதிரான அணியில் வாய்ப்பு கிடைக்காத விஹாரி, பிரித்வி, அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் ஏ அணியில் இடம் பெற்றுள்ளனர்.

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரில் தமிழக அணிக்காக விளையாடி வரும் ஆல்ரவுண்டர் பாபா அபராஜித்தும்  இந்தியா ஏ அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அணி விவரம்: பிரியங்க் பாஞ்ச்சால் (கேப்டன்),  ஹனுமா விஹாரி, பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல், சர்பராஸ்கான், பாபா அபராஜித்,  உபேந்திரா யாதவ் (விக்கெட் கீப்பர்),  கே.கவுதம்,  ராகுல் சாஹர், சவுரப் குமார், நவ்தீப் சைனி, உம்ரான் மாலிக், இஷான் போரெல், அர்ஸன் நக்வாஸ்வாலா.

Tags : India ,Hanuma ,Aalajid , Hanuma, Aparajith in India A team
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை