டபுள்யூடிஏ பைனல்ஸ்: படோசா, மரியா வெற்றி

குவாதலஜாரா: மெக்சிகோவில் நடக்கும் டபுள்யூடிஏ பைனல்ஸ் மகளிர் டென்னிஸ் தொடரின் லீக் ஆட்டங்களில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, கிரீஸ் வீராங்கனை மரியா சாக்கரி வெற்றியை பதிவு செய்தனர். சீசன் முடிவு உலக தரவரிசையில் டாப் 8 வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும்  டபுள்யூடிஏ பைனல்ஸ்ட்ஹொடர் மெக்சிகோவின்   குவாதலஜாராவில் நடக்கிறது. ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் 2 குழுக்களாக ரவுண்டு ராபின் லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. சிசென்-இட்சா பிரிவில் அரினா சபலென்கா (1வது ரேங்க், பெலாரஸ்), படோசாவுடன் (5வது ரேங்க்) மோதினார்.

 முதல் செட்டில் சபெலென்கா 4-2 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தாலும், பின்னர் அதிரடி காட்டி தொடர்ச்சியாக புள்ளிகளைக் குவித்த படோசா  6-4 என கைப்பற்றி அசத்தினார். அதே வேகத்துடன் 2வது செட்டிலும் அதிரடி காட்டிய படோசா 6-4, 6-0 என நேர் செட்களில் அபாரமாக வென்றார். இப்போட்டி 1 மணி, 16 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. இதே பிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் மரியா சாக்கரி (4வது ரேங்க்) 6-2, 6-4 என்ற நேர் செட்களில் போலந்தின் இகா ஸ்வியாடெக்கை (5வது ரேங்க்) வீழ்த்தினார். இப்போட்டி 1 மணி, 26 நிமிடத்துக்கு நீடித்தது.

Related Stories: