புழல், சோழவரம், ரெட்டேரி ஏரிகளில் உபரிநீர் திறப்பு

புழல்: சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி. தற்போது 2946 மில்லியன் கனஅடி உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 2662 கனஅடி வந்து கொண்டிருக்கிறது. வினாடிக்கு 2500 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல், மற்றொரு ஏரியான சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கனஅடி. தற்போது 932 மில்லியன் கனஅடி உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 2,237 வந்து கொண்டிருக்கிறது. 2,000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

மேலும், மாதாவரம் ரெட்டேரி முழு கொள்ளளவு 35 மில்லியன் கனஅடி. இதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கலங்கல் வழியாக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி உபரி நீர் செல்கிறது. இதனால், இதன் அருகே உள்ள எம்ஜிஆர் நகர், அறிஞர் அண்ணா நகர், பாலாஜி நகர், வெஜிடேரியன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அந்தந்த பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. இந்த பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: