×

மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை தொண்டு நிறுவனங்கள் வழங்கலாம்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்க முன்வரவேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி எல்லைக்குள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான மூன்று வேளை உணவு அனைத்து மண்டலங்களிலும் தரமான மற்றும் சுவையான முறையில் தயாரித்து அந்தந்த இடத்திற்கே நேரில் சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

 மேலும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய், பாய், தலையணை, போர்வை, சோப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்க முன்வந்தால், மண்டலம்-8, சென்னை-102, ஷெனாய் நகர், கீழ்ப்பாக்கம் கார்டன் காலனி, நியூ ஆவடி சாலை அருகில் உள்ள ஜெ.ஜெ.உள்விளையாட்டு அரங்கத்திற்கு நேரில் கொண்டு வந்து வழங்கலாம்.

அழுகும் பொருட்கள், சமைக்கப்பட்ட உணவு வகைகள் மற்றும் பழைய பொருட்கள் போன்றவைகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும். சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள நிவாரண பணிகளுக்கு உடன் இணைந்து பணி செய்ய விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் சென்னை மாநகராட்சியில் https://forms.gle/NkEVTjvsH8hKTvoo9 என்ற இணைப்பில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு, 94450 25821 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Rain, public, essentials, Charities, Corporation
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...