செம்மஞ்சேரியில் கனமழை காவல் நிலையம் இடமாற்றம்

துரைப்பாக்கம்: செம்மஞ்சேரி காவல் நிலையம் 2009ல் துவங்கப்பட்டது. சோழிங்கநல்லூர் நான்குமுனை சந்திப்பில் உள்ள வருவாய்த் துறை கட்டடத்தில்,  இந்த காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதற்கான சொந்த கட்டிடம் சோழிங்கநல்லுார் ஆவின் வளாகம் அருகில் கட்டப்பட்டது. விரைவில் இது பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக தற்போது செம்மஞ்சேரி காவல் நிலையம் செயல்படும் கட்டிடத்தில் தண்ணீர் புகுந்தது.

இதையடுத்து, சோழிங்கநல்லுார்-மேடவாக்கம் சாலை, முகமது சதக் கல்லுாரி எதிரில், எண்:14/17ல் உள்ள குடியிருப்பின் முதல் தளத்தில் தற்காலிகமாக செம்மஞ்சேரி காவல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அவசர உதவிக்கு, காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசனை 94438 08523 என்ற எண்ணிலும், காவல் நிலையத்தை 94981 00172 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம், என காவல்துறை அறிவித்துள்ளது.

Related Stories:

More