அவசரகால பணிக்கு டெண்டர் விடாமல் நிதியை பயன்படுத்த அதிகாரம்: பொதுப்பணித்துறைக்கு அனுமதி

சென்னை: தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் தயானந்த் கட்டாரியா  வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: பொதுப்பணித்துறையில் கட்டுமான பணிகளுக்கு தலைமை பொறியாளர் ரூ.1 கோடி வரை டெண்டர் வைக்காமல் செலவு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

உதவி செயற்பொறியாளர் இதுவரை தொழில்நுட்ப பணிகளுக்கு ரூ.10 ஆயிரம் மட்டுமே செலவு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் ரூ.20 ஆயிரம் வரையும், செயற்பொறியாளர் ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சம் வரையும், கண்காணிப்பு பொறியாளர் ரூ.1 கோடி என்று இருந்த நிலையில், ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையும், தலைமை பொறியாளர் ரூ.2 கோடிக்கு மேல் ஒப்புதல் அளிக்கலாம். எல்க்டரிக்கல் பணிகளுக்கு செயற்பொறியாளர் ரூ.5 லட்சம் என்கிற நிலையில், ரூ.10 லட்சம் வரையும், தலைமை பொறியாளர் ரூ.10 லட்சத்துக்கு மேல், சிவில் கட்டுமான ஒப்பந்தப்புள்ளிக்கு ஒப்புதல் அளிக்க உதவி செயற்பொறியாளருக்கு ரூ.2 லட்சம் வரையும், செயற்பொறியாளர் ரூ.10 லட்சம் முதல் ரூ.30 லட்சம் என்ற நிலையில் தற்போது ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையும், கண்காணிப்பு பொறியாளர் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையும் அதிகாரம் வழங்கப்படுகிறது.

அதே நேரத்தில் செயற்பொறியாளர்கள் ரூ.5 ஆயிரம் வரைக்கு பொருட்களை கொள்தல் செய்வதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த  ஆணையின்படி நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

Related Stories:

More