×

அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல் தமிழகத்தின் மின்தேவை 11,000 மெகாவாட்

சென்னை: கடும் மழையினால்  நிறுத்தி வைக்கப்படிருந்த வடசென்னை அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தியை தொடங்கியது குறித்து மின்சாரத்  துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று அனல் மின் நிலைய தலைமை பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்கள், செயற் பொறியாளர்கள் மற்றும் உதவி செயற் பொறியாளர்களுடன் ஆய்வு நடத்தினார்.  பின்னர்,  அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  

தமிழகத்தின் தற்போதைய  உட்சபட்ச மின்தேவை 11,000 மெகா வாட்கள். இந்த மின் தேவையினை சொந்த மின் உற்பத்தி மூலம் 3,500 மெகாவாட்டும், மத்திய தொகுப்பிலிருந்து 4,500 மெகாவாட்டும் மற்றும் இதர மின் உற்பத்தி மூலம் 3,000 மெகாவாட் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. தமிழகத்தின் தற்போதைய  குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச மின்தேவை 9,000 மெகாவாட் முதல் 11,000 மெகாவாட்டாக  உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனல் மின் நிலையங்களான வட சென்னை அனல் மின் நிலையம் நிலை 1ன்  அலகு 3, வட சென்னை அனல் மின் நிலையம் நிலை 2ன் அலகு 1, அலகு 2, தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் அலகு 2, அலகு 3 மற்றும் அலகு 5,  மேட்டூர் அனல் மின் நிலையம்  நிலை 1ன் அலகு 2, அலகு 3 மற்றும் அலகு 4, மேட்டூர் அனல் மின் நிலையம்  நிலை 2ன் அலகு 1   ஆகியவை  இயக்கத்தில் உள்ளது.   மரம் விழுந்ததால், மழைநீர் வடிகால் கால்வாயை அடைத்தது. இதனால், மின்நிலையத்தின் நிலக்கரி சேமிப்பு தளத்தில் மழைநீர் 2 அடிக்கும் மேலாக தேங்கியது.

மேலும், நிலக்கரியை கையாளுவதில் ஏற்பட்ட தடையினாலும் மற்றும் பலத்த காற்று வீசுவதால் கப்பலில் இருந்து நேரடியாக நிலக்கரியை இறக்க முடியாத காரணத்தினால் வட சென்னை அனல் மின் நிலையம் நிலை 1ல் தற்காலிமாக நிறுத்தப்பட்ட 2 அலகுகளில் 1 அலகு மீண்டும் மின் உற்பத்தியை தொடங்கியது.  இன்னொரு அலகானது தேவைப்படும் மின் பலுவை பொருத்து இயக்கத்திற்கு கொண்டு வர தயார் நிலையில் உள்ளது என்றார். இதில் மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags : Minister ,Senthilpalaji ,Tamil ,Nadu , Minister Senthilpalaji, Tamil Nadu, Mindevai, MW
× RELATED “தமிழ்நாடு என்னை மிகவும் கவர்ந்த...