முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அண்ணாமலை வாய் மூடிக்கொண்டிருப்பது நல்லது: வைகோ கண்டனம்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: முல்லை பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்று கேரள அரசு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. தமிழக அரசு அதை எதிர்த்து வழக்கு தொடுத்தது. வழக்கின் முடிவில் மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு, முல்லைப் பெரியாறு அணையில் முதலில் 142 அடி வரை தண்ணீரை உயர்த்திக்கொள்ளலாம் என்றும், அதன்பின்னர் 145 அடி உயர்த்தலாம் என்றும், பின்னர் பேபி அணையை வலுப்படுத்திய பிறகு 152 அடி வரை உயர்த்திக்கொள்ளலாம் என்றும் தீர்ப்பு கொடுத்தது. 

பாஜவில் இப்பொழுது வந்து சேர்ந்திருக்கின்ற அண்ணாமலை, முதலில் வெறும் போலீஸ் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். அவருக்கு தமிழகத்தை பற்றி ஒன்றும் தெரியாது. வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது. இந்தப் பிரச்னையைப் பற்றி அகரம்கூட தெரியாத அண்ணாமலைகள் என் பெயரை உச்சரிக்க எந்த தகுதியும் கிடையாது.  இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. 

Related Stories: