×

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 3வது நாளாக எடப்பாடி ஆய்வு: மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இந்நிலையில் நேற்று 3வது நாளாக எடப்பாடி பழனிசாமி கிழக்கு தாம்பரம், கீழ்க்கட்டளை (அம்பாள் நகர்), சோழிங்கநல்லூர் தொகுதி, கோவிலம்பாக்கம், காரப்பாக்கம், கொட்டிவாக்கம் உட்பட இடங்களுக்கு நேற்று நேரில் சென்று ஆய்வு செய்து, அப்பகுதி மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார்.

பள்ளிக்கரணை-நாராயணபுரம் ஏரியை ஆய்வு செய்தார். தொடர்ந்து தரமணி, வேளச்சேரி, தேனாம்பேட்டை-ஆலயம்மன் கோயில், மயிலாப்பூர் தெப்பகுளம் மற்றும் ஆயிரம்விளக்கு தொகுதி புஷ்பா நகர் பகுதிக்கு உட்பட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார். மேலும் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இடங்களுக்கும் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது, முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், பா.வளர்மதி, சின்னையா, மாவட்ட செயலாளர்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன், கே.பி.கந்தன், எம்.கே.அசோக், ஆதிராஜாராம், வெங்கடேஷ் பாபு,  முன்னாள் எம்எல்ஏக்கள் நட்ராஜ், ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் எம்பிக்கள் டாக்டர் ஜெயவர்தன், விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.



Tags : Edappadi , Edappadi survey on 3rd day in rain affected areas: Provided relief aid to the people
× RELATED கச்சா எண்ணெய் விலை குறைந்தும்...