ஹஜ் பயண விமான சேவை கோரி பிரதமருக்கு கடிதம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஹஜ் அசோசியேஷன் பாராட்டு

சென்னை: ஹஜ் பயணத்துக்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவைக்கு வலியுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இருந்து அடுத்த ஆண்டு ஹஜ் பயணம் செல்வோருக்கு கொச்சியில் இருந்து விமானம் இயக்கப்படுவது பெரும் சிரமத்தைக் கொடுக்கும் என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

வழக்கமாக, சென்னையிலிருந்து விமானம் இயக்கப்படும்போது ஏராளமான ஹஜ் பயணிகள் செல்வதற்கு வசதியாக இருந்தது. ஆனால் தற்போது ஹஜ் செல்ல கொச்சி விமான நிலையத்திலிருந்து விமானங்கள் இயக்கப்படுவது தமிழக ஹஜ் பயணிகளுக்கு தூரமாகவும் பெரும் பாரமாகவும் அமைந்திருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சென்னையில் இருந்து இந்த ஆண்டு ஹஜ் செல்வதற்கான விமானத்தை இயக்குவது குறித்து உடனடியாக பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருப்பது அனைத்து இஸ்லாமியர்களுக்கும் ஹஜ் பயணிகளுக்கும் மிகுந்த மன மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சிறுபான்மை மக்களின் காவலனாக இருக்கும் தமிழக முதல்வர் எப்போதும் தந்தையைப் போலவே மகனும் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

இஸ்லாமியர்கள் அனைவரும் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். இந்த நேரத்தில் இந்திய ஹஜ் அசோசியேஷன் சார்பில் நன்றியையும் வாழ்த்துகளையும் முதலமைச்சருக்கு தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More